சென்னை, செப்.6-ஆசிரியர் தினத்தையொட்டி, டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரை சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவிகளிடையே டெல்லியில் உள்ள மானேஷா ஆடிட்டோரியத்தில் உரை நிகழ்த்தி, மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.சென்னை பள்ளிகளில் நேரடி உரைஇந்த நிகழ்ச்சியை, இந்தியா முழுவதும் உள்ள சுமார் 18 லட்சம் பள்ளிகளில் காணொலி காட்சி மற்றும் தொலைக்காட்சி வழியாக மாணவ-மாணவிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சென்னையில் உள்ள கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம், வேளச்சேரி டி.ஏ.வி. மேல்நிலை பள்ளி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மெட்ரிக் பள்ளி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் உள்பட பல்வேறு பள்ளிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மாணவ-மாணவிகள் கேட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.வேளச்சேரி டி.ஏ.வி. பள்ளியில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-அரசியல் ஆக்கியவர்களுக்கு பதிலடிஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு பிரதமர் குழந்தைகள் மத்தியில் பேசி, குழந்தைகளுக்கும், பிரதமர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த உரையின் போது, ஒழுக்கம் என்றால் என்ன? மாணவர்கள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ்ந்து, உழைத்து முன்னேற வேண்டும் என்பது குறித்து கூறினார்.எல்லோரும் கல்வி கற்க வேண்டும், குறிப்பாக பெண்கள் கல்வி கற்க வேண்டும். அதன் மூலம் 2 குடும்பங்கள் பயன் அடையும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை அரசியலாக்கியவர்களுக்கு எல்லாம் நிகழ்ச்சியின் வெற்றியே பதிலடியாக அமைந்திருக்கும்.தமிழக அரசு இதனை ஒரு கட்சியின் தலைவர் என்று பாராமல், நம் நாட்டின் பிரதமர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும். இது கண்டனத்துக்குரிய செயலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment