Friday, 26 September 2014

மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் முறை

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், ஆன்-லைன் முறையை விரைவில் கொண்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது,
இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இதுபோல், அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக, சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

0 comments:

Post a Comment