This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label LEAVE RULES. Show all posts
Showing posts with label LEAVE RULES. Show all posts

Saturday, 3 January 2015

விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு
பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்

கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.
0 – 2 வருடம் = இல்லை
2 – 5 வருடம் = 90 நாட்கள்
5 – 10 வருடம் =180 நாட்கள்
10 – 15 வருடம் =270 நாட்கள்
15 – 20 வருடம் =360 நாட்கள்
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

Tuesday, 25 November 2014

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:


  உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
             செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.


அப்படியானால்,
27 நாட்கள் அரை சம்பளம்,
4 நாட்கள் முழு சம்பளம் .
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும்.

காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
>Pay-13,380/31=431.61
(ஒரு நாள் Pay)
>Half pay=431.61/2=215.8

(அரை நாள் Pay)
27 days half pay=215.8*27=5826.

4 days full pay= 431.61*4=1726.4
Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.

Wednesday, 19 November 2014

Tuesday, 18 November 2014

தற்செயல் விடுப்பு விதிகள்

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.


2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம்.
(அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)
3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். 
(அவி. இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம்.
(அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)
7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83

Monday, 17 November 2014

விடுப்பு ஊதியம்

Saturday, 20 September 2014

அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள் - தற்செயல் விடுப்பு

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது
ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.
2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)





3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)
7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம்.
( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

Tuesday, 5 August 2014

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :

1. அரசுவிடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ்(கெசெட்) வெளியீடு
மூலம் ஆண்டு தோறும்அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்புவிடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்டவிடுப்பு என்றும் கூறுவர். ஒருகாலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்புபண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களைஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப்பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
3. தற்செயல்விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில்12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்தபின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
4. ஈட்டியவிடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணிசெய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்றகணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால்ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்றஎண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவுவைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்குஇதில்பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்துபணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்துவைத்து பணி ஓய்வின் போதுபணமாகப் பெறலாம்.
5. மருத்துவவிடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்புஎன்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்புஎடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்குமேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின்ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்குஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள்மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள்எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள்வரை எடுக்க தகுதி உண்டு.
6. சொந்தகாரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு(Unearned Leave on Private Affairs) சொந்தகாரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம்10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள்தகுதியானவை ஆகும். தகுதி காண்பருவத்தினருக்கு கிடையாது.
7. மகப்பேறுவிடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுகாலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்குமட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும்உண்டு.
8. சிறப்புதற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சைசெய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேசவிளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காகவழங்கப்படும்.
9. மாற்றுப்பணிஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒருநாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல்- பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம்8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம்இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள்+ ஒவ்வொரு 160 கி.மீ. தூரம்வரை ஒரு நாள் பயணநாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள்பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டியவிடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்

Sunday, 27 July 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

* தகுதிகாண் பருவத்தில்
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.




* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான EL -ஐ
ஒப்படைக்க முடியாது. EL
நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.
அதில் 15
நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்
அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப்
பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால்
ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365
நாட்கள்.இதை 17ஆல் (EL)
வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML
எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும். (CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

* ஒரு நாள் மட்டும் EL
தேவைப்படின்
எடுத்துக்கொள்ளலாம்.

்* அரசு ஊழியர்களுக்கு மட்டும்
வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்
மட்டுமே). அதில் 15
நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச
மாக 240 நாட்களைச்
சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல்
சேருபவை எந்தவிதத்திலும்
பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு /
பணியிறக்கம் / நிரவல் போன்ற
நிகழ்வுகளின் போது பழைய
இடத்திற்கும் புதிய
இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால்
அனுபவிக்காத
பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும். இதற்கு 30
நாட்களுக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். 90 நாட்களுக்குள்
கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5
நாட்கள். 160 கி.மீ
க்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த
அதே தேதியில் தான்
ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம்
குறிக்க எளிமையாக
அமையவும் ஒரே தேதியில்
ஆண்டுதோறும்
அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்
செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும்
ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த
ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15
நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள்
ஒப்படைப்பெனில்
இரண்டாண்டு இடைவெளி இருக்க
வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான்
முக்கியமே தவிர
விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும்
தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின்
போது குறைந்த
அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA
உயர்த்தப்படும்
போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும்
இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய
நிலுவையையும்
சேர்த்து சுதந்தரித்துக்
கொள்ளலாம். ஊக்க ஊதியம்
முன்தேதியிட்டுப் பெற்றாலும்
நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில்
ஒப்படைப்பு தேதி வந்தால்
சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின்
போது இருப்பிலுள்ள EL
நாட்களுக்குரிய (அதிகபட்சம்
240) அப்போதைய சம்பளம்
மற்றும்
அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக
ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Saturday, 26 July 2014

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்.

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.


2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில்"ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப்பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில்பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய/ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

Saturday, 19 July 2014

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்:

பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
தற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்புதற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்டவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்

கருச்சிதைவுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
தத்தெடுப்புவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
ஈட்டியவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
சொந்தக்காரணவிடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
அசாதாரணவிடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)
மருத்துவவிடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.
0 - 2 வருடம்= இல்லை
2 - 5 வருடம்= 90 நாட்கள்
5 - 10 வருடம்=180 நாட்கள்
10 - 15 வருடம்=270 நாட்கள்
15 - 20 வருடம்=360 நாட்கள்

20 வருடத்திற்குமேல் = 540 நாட்கள்.

Saturday, 5 July 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்.

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

*மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால்365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது