This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label UNIVERSITIES. Show all posts
Showing posts with label UNIVERSITIES. Show all posts

Tuesday, 16 December 2014

காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

  மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  

           இப்பல்கலையின் எம்.எஸ்.சி., சி.எஸ்.,/ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல், கவுன்சிலிங் அண்ட் பிஸியோதெரபி, எம்.காம்., எம்.காம்., பைனான்ஸ், எம்.டி.எம்., எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., தமிழ், இசை, இந்திய பண்பாடு மற்றும் பி.லிட்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல் அதற்கான விண்ணப்பங்களை www.mkuniversity.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கட்டணத்தை 'டிடி'யாக இணைத்து ஜன., 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தேர்வாணையர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Saturday, 20 September 2014

Sunday, 14 September 2014

Tuesday, 19 August 2014

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

இதுகுறித்து சென்னை பல்கலை கழகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல் கலையில், முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வுகள்
கடந்த, ஜூன் மாதம் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன. மேலும் தகவல்களுக்கு, பல்கலையின்,www.unom.ac.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். டிசம்பர் மாத தேர்வுக்கான விண்ணப்பத்தை, பல்கலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, 13 August 2014

ஆக.17ல் இக்னோ நுழைவுத் தேர்வு


மதுரை: மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை,

உத்தமபாளையம், ராமநாதபுரம் ஆகிய 10 மையங்களில் 4,800 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான நுழைவு சீட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இக்னோவின் இணையதளம் மூலம் மாணவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 238 0733 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Thursday, 7 August 2014

மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் பி.எட் கவுன்சலிங்கில் அனுமதி மறுப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விளக்கம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் பி.எட் கவுன்சலிங்கில் அட்டஸ்டடு பெற்ற மதிப்பெண் சான்றிதழை அளிக்கலாம் என்றும், ஒரு வாரத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஒப்படைக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர் குணசேகரன் தெரிவித்தார்.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுமுடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் அரசு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பி.எட் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக நேரடியாக பல்கலைக்குவந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கையொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கினார். இந்நிலையில், புதன்கிழமை பி.எட். கவுன்சலிங் சென்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மதிப்பெண் சான்றிதழ் முறையாக இல்லாதகாரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக புகார் தெரிவித்தனர். தி இந்து ‘‘உங்கள் குரல்’’ பகுதியில் மாணவி ஒருவர் புதன்கிழமை புகார் பதிவு செய்திருந்தார். இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இதுவரை 4 பருவத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 6-வது பருவ தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை. முதுநிலை மாணவர்களுக்கு இதுவரை எந்த பருவ தேர்வுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கவில்லை. கிராமப்புற மாணவர்கள் படிக்கும் எங்கள் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் இருக்கின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையால் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கவுன்சலிங் சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதே சூழ்நிலைதான் அடுத்து வரும் நாட்களுக்கு நடக்கும் பி.எட் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு அவசரமாக தீர்வு காணவேண்டும்’’ என்று அரசு கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் குணசேகரனிடம் கேட்டபோது,‘‘மாணவர்களுக்கு 5-வது பருவத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் அனைத்தும் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பிவிட்டோம். 6-ம் பருவத்திற்கான மதிப்பெண் பட்டியல் மட்டும் நிலுவையில் இருக்கிறது. அதையும் விரைவில் அளித்துவிடுவோம். பி.எட் கவுன்சலிங்கில் நமது பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் புதன்கிழமை வெற்றுத் தாளில் மதிப்பெண்கள எழுதிகல்லூரி முதல்வரிடம் அட்டஸ்டடு வாங்கிச் சென்றுள்ளனர். இதை கவுன்சலிங்கில் இருந்தவர்கள் ஏற்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.மாணவர்கள் தங்களது இறுதிப் பருவ தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அரசுக் கல்லூரி மணவர்கள் என்றால் முதல்வரிடமும் தனியார் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடமும் அட்டஸ்டடு பெற்றுச் செல்லலாம். திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை ஒரு வாரம் கழித்து ஒப்படைக்கலாம். இது தொடர்பாக கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசி அனுமதிவாங்கிவிட்டேன்’’ என்றார்.

Wednesday, 6 August 2014

Periyar University Recruitments : Assistant Professor Vacancy Notification for direct recruitment process in Periyar University

Periyar University,
Salem 636 011, Tamil Nadu


Applications are invited for the Post of Assistant Professors in Salem Periyar University
Advertisement No.PU/R/D1/2014/08 to 12
Advertisement date 01.08.2014
Last date 31.08.2014


Post :
Assistant Professor - 6 Posts - PB3 AGP 6000 - Post Graduate with Good Academic Records and UGC / CSIR NET/ SET / SLET / PhD - Age
Chemistry - 1 Post for UR
Food Science and Nutrition - 1 Post for SC
Journalism and Mass Communication - 1 Post for UR
Psychology - 1 Post for SC(A)
Textile and Apparel Design - 1 Post for UR
General Instructions :
8 Set of Application Form to be submitted for AP Post.
Application Fee Rs.500 for UR / BC / MBC candidates.
Application Fee Rs.250 for SC / ST candidates.
Demand Draft in favour of "The Registrar, Periy ar University" payable at Salem.

Notification http://www.periyaruniversity.ac.in/files/news/post/Assistantprofessor.pdf

Saturday, 2 August 2014

Friday, 1 August 2014

சோழிங்கநல்லூர்-காரப்பாக்கம் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.95 கோடியில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கட்டிட வளாகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, ஆக.2-சோழிங்கநல்லூர்-காரப்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.95 கோடியில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாக கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உயர்கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.95 கோடியில் பல்கலைக்கழக கட்டிட வளாகம்* 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப்பட்டப்படிப்பினையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் கல்லு£ரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.*மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.மாணவியர் விடுதிகள்*பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இளநிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-க்கு என நிர்வாகக் கட்டிடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக்கட்டிடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். 1,112 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்*2013-14-ம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். *திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப்பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக்கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.*இந்தியாவின் அறிவுத்தலைநகரமாகவும், புதுமைத்தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்பயுகத்தில், உயர் கல்வித்துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப்பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்- நூல்கள், மின்-இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.புதிய பாடப்பிரிவுகள்*தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.*2014-15-ம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப்பிரிவுகள் மற்றும் 52 பி.எச்.டி. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப்பிரிவுகள்அறிமுகப்படுத்தப்படும்என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Monday, 28 July 2014

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா

மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலும், பி.எட்., முடித்த ஆசிரியர்கள் கூடுதல் தகுதி மற்றும் ஊக்கத் தொகை பெறுவதற்கு, எம்.எட்., படிப்பார்கள். இப்படிப்பு தற்போது இக்னோ, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் ஆகிய பல்கலைகளில் மட்டும் உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் இப்படிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர். எம்.எட்., முடித்தால் ரூ.2,500 முதல் 3 ஆயிரம் வரை ஆசிரியருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். மேலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பி.எட்., கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.
எனவே, தொலை நிலைக் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் மதுரை காமராஜ் பல்கலையில், எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் நாக சுப்பிரமணியன் கூறுகையில், 'எம்.எட்., என்பது ஒருசில பி.எட்., கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. அதிக ஆசிரியர்கள் இப்படிப்பை படிக்க தயாராக உள்ளனர். காமராஜ் பல்லையில் மாலைநேர கல்லூரியில் ரெகுலராகவோ அல்லது தொலைநிலைக் கல்வியிலோ இப்படிப்பை துவங்க நடவடிக்கை எடுத்தால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் பெறுவர்,' என்றனர்.
'தொலைநிலைக் கல்வியில் எம்.எட்., துவங்குவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம், அனுமதி கோரப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பல்கலை வட்டாரம் தெரிவித்தன.

திருவள்ளுவர் பல்கலை. முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி.?

திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல குளறுபடிகள் காணப்படுவதாக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் அய்.இளங்கோவன்புகார் தெரிவித்துள்ளார்


இதுகுறித்த அவரது அறிக்கை:பல்கலைக்கழகம் சனிக்கிழமை தனது இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.இதில் எம்.எஸ்சி கணினி அறிவியல் 4-ம் பருவத் தேர்வு முடிவுகள் பலருக்கு வெளியிடப்படவில்லை.எம்.எஸ்சி கணினி அறிவியல் மாணவர்கள் பலருக்கு புராஜக்ட் முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.எம்.காம் மாணவர்கள் பலருக்கு புராஜக்ட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.எம்.எஸ்சி வேதியியல் 4-ம் பருவத்தில் 7 தாள்கள் தேர்வு எழுதியமாணவர்கள் பலருக்கு முழுமையாக மதிப்பெண் வெளியிடப்படவில்லை.அதேநிலை எம்.எஸ்சி கணிதம் 4-ம் பருவத்தில் 5 தாள்கள் எழுதிய மாணவர்களுக்கும் உள்ளது.குளறுபடிகள் பல உள்ள நிலையில், விடைத்தாள் நிழற்பட நகல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 30 என அறிவிக்கப்பட்டுள்ளது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.இது தொடர்பாக தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும். முதல்வர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

முடிவுகளை பார்ப்பதில் சிரமம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காண்பதற்கு சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக நேரம் செலவிடும் அளவில் இணையதளத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.பல்கலை. நடவடிக்கையில் மாற்றம் தேவை! பல்கலைக்கழகம் குளறுபடியற்றதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கில்தான் பலரும் அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறோம்.ஆனால் பல்கலைக்கழகம் இந்த சுட்டிக்காட்டும் நடவடிக்கைகளைக் கூட தவறாக கருதும் நிலை காணப்படுகிறது.அத்தகைய போக்கை பல்கலைக்கழகம் இனி வருங்காலங்களில் கைவிட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத அளவிலும், இனியாவது வேகமான வளர்ச்சியைப் பெறுவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தைச் சேர்ந்த கல்விஆர்வலர்கள் கருத்து கூறினர்