This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

Tuesday, 6 January 2015

TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு 

இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் தற்பொழுது Print out எடுக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியானது 19.01.2015 முதல் 14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது. 

Tuesday, 23 December 2014

டி.டி.இடி தேர்வு மதிப்பெண் சான்று வினியோகம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம்ஆண்டுக்கான மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண்
சான்றுகள்வினியோகம் செய்யப்படும்.
மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட தேர்வுக்கு விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 30ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்துக்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை நேரிலேயே செலுத்தலாம்.

Sunday, 2 November 2014

FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்

5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றுள்ள  திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார்தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC STஆசிரியர் பட்டியலில் 90 க்கு மேல்

பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்புஇருந்தது   மேலும் 90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில்
சென்னை உயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும்தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு   பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ்
 இடம் பெற்று இருந்தனர்இதனால் ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசைபின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட  பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லைஎனவே இந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார்.




Thursday, 16 October 2014

TNTET:இடைநிலை ஆசிரியர்களுக்கான 2வது தேர்வுப்பட்டியல் வெளியீடு

 Teachers Recruitment Board College Road, Chennai-600006DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013Provisional Selection List of Candidates for Miniority Subjects DEE And Other DepartmentsTeachers Recruitment Board has issued Notification for the Direct recruitment of Secondary Grade Teachers vide Notification No. 06/2014, dated 21.08.2014
.The Board has also decided to accept the option of “willingness to join Government Service” already submitted by the candidates at the time of certificate verification of TNTET-2012 and 2013 as application for the post of Secondary Grade Teachers.Board has already released the provisional result for the direct recruitment of B.T. Assistant 2012 – 2013 and Secondary Grade Teachers for the vacancies in the School Education and Elementary Education Department on 10.08.2014, 26.08.2014 and 27.08.2014 respectively.The Board also releases the provisional selection list for the Secondary Grade Teachers vacancies in Minority Language medium and BC & MBC Welfare Department.This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.The appointment order for the selected candidates after satisfying all conditions will be issued by the concerned user Department separately after due process.Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.          Dated: 16-10-2014Member Secretary

Tuesday, 9 September 2014

TET CASE

TET CASE சம்மந்தமான விசாரனை , இன்று மதுரை கோர்டுக்கு வரவில்லை

Friday, 15 August 2014

டி.இ.டி.,யில் புதிய 'வெயிட்டேஜ்' முறை : பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது.

அதில் முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 'வெயிட்டேஜ்' முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில் இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.

2008-09ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது.

இதனால், 'வெயிட்டேஜ்' முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.

2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை.

அவர், கூறுகையில், ' 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.

புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்' என்றார்...

Saturday, 9 August 2014

TET Article: மூத்த ஆசிரியர்கள் பலி ஆடுகளா?

 
TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71 


           தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும் முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு 15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சனை:
1)    ஆசிரியர் தகுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது சரியான முறை. ஏனெனில் இந்த தேர்வு அனைவராலும் ஒரே நேரத்தில்., ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு எழுதப்பட்ட பொதுவான தேர்வு ஆகும்.
2)   +2 க்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது மிகவும் தவறான முறை. ஏனெனில் +2 படிப்பை ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டங்களிலும், பல விதமான பாடப்பிரிவுகளிலும், பல விதமான பள்ளிகளிலும் பயில்கின்றனர். இங்கு தொழிற்கல்வி பாடபிரிவில் செய்முறைக்கு 450 மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில்  MATRIC பள்ளி, CBSE பள்ளி, INTERNATIONAL பள்ளி என்று பல்வேறு விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். மேலும் பள்ளிகளில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பல விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். இதில் எங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு முரண்பாடுகளை கொண்ட படிப்பை அனைவரும் சமம் என்று கூறுவது மிகவும் தவறானது.
3)  மேலும் பட்ட படிப்பு  மற்றும் பட்டய படிப்பிலும் பல்வேறு விதமான முரண்பாடுகள் உள்ளது. இதிலும் படித்த காலங்கள், படித்த கல்லூரிகள், படித்த பாடம் மற்றும் தேர்வு முறை முற்றிலும் வேறுபடுகிறது. கல்லூரிகள் என்று பார்த்தால் தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலை என்று பல உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு இன்டர்னல் மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் இன்று 25 மதிப்பெண் இன்டர்னல் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணே மூன்று வருடத்திற்கு 750 க்கு மேல் கிடைக்கிறது. இன்றைய சூல்நிலையில் நிறைய வசதிகளுடன் கூடிய தனியார் கல்லூரிகள் அதிகம். படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
4)  இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றால் அடுத்தமுறை தகுதிதேர்வு எழுதி அதன் மதிப்பெண்ணை அதிகப்படுத்த முடியும். ஆனால் எனது +2, UG, B.ED மதிப்பெண் என்பது நிரந்தரமானது. அதை எப்படி என்னால் அதிகப்படுத்த முடியும். எப்படி பார்த்தாலும் எனது பணி வாய்ப்பு என்பதே எதிர்காலத்தில் இல்லை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
5)  மேலும் +2, UG, B.ED என்பது தகுதித்தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகளே.  அடிப்படை தகுதி படிப்புகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது என்பது தவறான முறையாகும்
6)  பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.  ஏன் பணி அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள் கிடையாதா? எந்த தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றாலும் பணி அனுபவம் உண்டா என்று தான் முதலில் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் எம்பிளாய்மென்ட்-ல் பதிவு செய்கிறார்கள். எதற்காக வயதுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இங்கு சீனியாரிட்டிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படவில்லை.
7)  தற்பொழுது கடைபிடிக்கப்படும் முறையில் வெறும் +2, UG, B.ED ல் பெறப்பட்ட மதிப்பெண்களை கொண்டு மட்டுமே ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையானது சரியானதல்ல. மதிப்பெண்ணை மட்டுமே அளவுகோலாக கொண்டால் இந்த ஆசிரியர் தேர்வு முறை சிறந்ததாக அமையாது.
8)  நமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் பல விதமாக உள்ளதால் தான் பொதுவான தேர்வு முறையே வந்தது. அந்த பொதுவான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்தால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். மேலும் சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
9) அரசானை எண் 71 ன் படி ஆசிரியர்ககளை தேர்வு செய்தால் தனியார் பள்ளியில் பயின்று, தனியார் கல்லூரியில் பட்ட மற்றும் பட்டய படிப்பை முடித்தவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். எங்கு அதிக மதிப்பெண் பெறப்படுகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஏன் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழை கிராமப்புற மாணவர்கள் யாரும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என நினைக்ககூடாதா?  கல்லூரி படிப்புகளின் மதிப்பெண்கள் அரசு வேலைக்கு செல்லும் போது எடுத்துகொள்வது முன்னதாகவே தெரிந்து இருந்தால் நாங்களும் ஒவ்வொரு தேர்வின் முக்கியத்துவம் கருதி படித்து இருப்போம். கஷ்டப்பட்டு படித்து தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
10)  இன்று அனைத்தும் தனியார்மயம். எங்கும் எதிலும் கம்யூட்டர் மயம். பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் இருந்த இடத்தில் இருந்து கேட்டு தெரிந்துகொள்ள செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி. SMART CLASS வசதி என்று கல்வித்துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. எனவே இவ்வளவு டெக்னாலஜி கொண்ட இந்த காலகட்டங்களையும் இதில் எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத எங்களுடைய காலக்கட்டங்களையும் ஒன்றுதான் என கூறுவது மிகவும் தவறு. தகுதி தேர்விலே குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு வேலை கேட்கவில்லை. அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு பறிக்கப்படுவாதால் தான் எங்கள் உரிமைகளை கேட்கிறோம்.
Article By: Raja bharathi
 

Tuesday, 29 July 2014

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படிஇரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகுடி..டி. (T.E.T.) ஆசிரியர்தகுதித் தேர்வு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்அரசு ஆரம்பப்
பள்ளிகளில் ஆசிரியராகப்

பணியாற்றமுடியும்.(இப்படி ஒரு வடிகட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வுமுறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்). இதில் எத்தனை வழக்குகள், தேவையற்றவிமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலிஇவற்றைஅடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை

முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மைவாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அதுபல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும்என்பது உறுதி.

1. இடைநிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடைபெறாதது.

2. பல்வேறுபோட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின்பரிதாப நிலை.இவை காரணமாகஇப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர்  பயிற்சிபள்ளிகளை மூட வேண்டிய கொடுமையானநிலை! மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை! மாணவர்ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும்அதிகம் வாய்ப்பாக அமையும்

ஆரம்பக் கல்விக்கு அரசுகள்செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச்சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய்முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்குE என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா

ஆட்சியாளர்மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிடபள்ளிகள் மூடப்படாமல்பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வுகாண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி

Monday, 28 July 2014

TNTET-வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர்.


இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Sunday, 27 July 2014

TNTET: வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்:3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்.தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைவைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல்கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம்சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பதுகுறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Monday, 21 July 2014

TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.

இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. 
அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

TNTET:வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்கு பதிலாக

டி.டி.எட் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.எட் சான்றிதழின் இரு நகல்களை கொடுத்து பழைய வெய்டேஜ் மதிப்பெண்ணுக்கு பதிலாக புதிய வெய்டேஜ் மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம்.அங்கேயே அவர்களுக்கான புதிய வெய்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது...

TNTET-ஜூலை 30:வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்.

வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படஉள்ளன.பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

Saturday, 19 July 2014

EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER-I (SECONDARY GRADE POST)

the cut off marks  mentioned below are fixed based on the entries of TET candidates in several websites..


FOR 2380 SEC.GRADE  POST.......



GT
 74.9
BC
 72.7
MBC
 71.8
SC
 70.6
SCA
 69.7
ST
 67.1
BCM
 72.8
    
                                                                                                                                           






EXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2 ALL SCIENCE AND GEOGRAPHY

the cut off marks  mentioned below are fixed based on the entries of TET candidates in several websites..



PHYSICS



GT
 69.3
BC
 64.5
MBC
 63.2
SC
 59.5
SCA
 58.4
ST
 56.2
BCM
 62.7
    
                                                                                                                                           




CHEMISTRY

GT
 70.3
BC
 65.7
MBC
 64.4
SC
 59.5
SCA
 59.1
ST
 55.7
BCM
 63.7
    
                                                                                                                                           
BOTANY

GT
 63.2
BC
 57.2
MBC
 55.7
SC
 53.1
SCA
 52.7
ST
 ALL
BCM
 59.4
    

ZOOLOGY

GT
 64
BC
 60.6
MBC
 59.6
SC
 56.3
SCA
 55.9
ST
 58.2
BCM
 62.3
    
                               

Thursday, 17 July 2014

TNTET 2013 :PAPER II EXPECTED CUT - OFF


Monday, 14 July 2014

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு
விரைவில்வெளியிடப்படும்

 என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822,
கணிதம் - 911,
இயற்பியல் - 605
வேதியியல் - 605,
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்.

Saturday, 12 July 2014

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு,



அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி.,தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.

*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும்,இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.


*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப்பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர்பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.