Showing posts with label NHIS. Show all posts
Showing posts with label NHIS. Show all posts
Friday, 28 November 2014
Thursday, 7 August 2014
காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் அதிகாரி தகவல்
சென்னை, ஆக.8-சென்னை மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் எஸ்.புவனேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியர் அலுவலகம், சென்னையில் ஓய்வூதியம் பெறும்
அனைத்து ஓய்வூதியர்களும் நேர்காணல் செய்ய கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் முடிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஓய்வூதியர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை நேர்காணல் செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரில் சென்று உடன் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் நேர்வில் ஆகஸ்டு மாதம் முதல் தங்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். நேரில் வர முடியாதவர்கள் உரிய மருத்துவர் அல்லது அரசிதழ் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம் உரிய வாழ்வுச் சான்று அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, 10 July 2014
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது தொடர்பாககேள்விகள் எழுப்பப்பட்டன.அதற்கு விளக்கமளித்துள்ள நிதித் துறை செயலாளர் க.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழக அரசு சார்பிலான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களின்குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தனது விளக்கக்கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Sunday, 6 July 2014
Monday, 30 June 2014
புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள
அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கியபடிவத்தை ஜூன் 30க்குள் அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதுஇதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம்பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கிகிளையில் அளித்து, அதன் ஒரு நகலைஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாளஅட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றிமருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
Saturday, 28 June 2014
ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்
ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:2014, ஜூலை 1 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் , நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள்அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கியில் இன்னமும் அளிக்காத காரணத்தால், ஜூலை31-ம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க காலக்கெடு நிர்ணயித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை விண்ணப்பங்களை வழங்காதவர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கிக்கிளையில் அளித்து, அதன் ஒரு நகலினை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.படிவ நகலினை, அடையாள அட்டை வழங்கப்படும்வரை இத்திட்டத்தின் கீழ் பணச்செலவின்றி ஜூலை 1 முதல் மேற்கொள்ளும் மருத்துவச் சிகிச்சைக்குபயன்படுத்திக் கொள்ளலாம்.இது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,கருவூலங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Monday, 23 June 2014
Friday, 23 May 2014
Subscribe to:
Posts (Atom)