Thursday, 7 August 2014

காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் அதிகாரி தகவல்


சென்னை, ஆக.8-சென்னை மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் எஸ்.புவனேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியர் அலுவலகம், சென்னையில் ஓய்வூதியம் பெறும்
அனைத்து ஓய்வூதியர்களும் நேர்காணல் செய்ய கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் முடிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஓய்வூதியர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை நேர்காணல் செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரில் சென்று உடன் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் நேர்வில் ஆகஸ்டு மாதம் முதல் தங்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். நேரில் வர முடியாதவர்கள் உரிய மருத்துவர் அல்லது அரசிதழ் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம் உரிய வாழ்வுச் சான்று அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment