தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும்15 தினங்களில் வெளியிடப்படும்.
இதேபோன்று வி.ஏ.ஒதேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும்1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம்காலியாக உள்ளன. இவற்றை நிரப்பஅக்டோபர் 18 மற்றும் 19–ந் தேதிகளில் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்–லைன் மூலம்விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21–ந்தேதி கடைசி நாள் ஆகும். 2011–க்கு பிறகு பி.எல். படித்தவர்களுக்கு அனுபவம் தேவையானது. அதற்குமுன்பு படித்தவர்கள் 3 வருடம் வக்கீலாக பணிபுரிந்துஇருக்க வேண்டும். 4 பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். போர்டுதேர்வு 60 மதிப்பெண் ஆகும். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால்எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment