Saturday, 23 August 2014

காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின்கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில்காலாண்டு தேர்வை முழு ஆண்டுத்தேர்வு போல் நடத்த வேண்டும்என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில்10,12-வது வகுப்பு காலாண்டுத் தேர்வுநடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வுசெப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ்2 தேர்வு செப்டம்பர்15இல் தொடங்கி, 26ஆம் தேதி வரைநடைபெறுகிறது.
இதுதொடர்பாகமாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள்மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் ஜெயக்குமார் அனுப்பிய சுற்றரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத்தேர்வு போல் நடத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவ, மாணவிகள் வீதம் தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வறை ஒன்றுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம்நியமிக்க வேண்டும். குறிப்பாக எந்தப் பாடத்திற்கு தேர்வுநடத்தப்படுகிறதோ, அப்பாடம் தொடர்பான ஆசிரியர்களை அறைக் கண்காணிப்பாளர் பணியில்எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

அரசு பொதுத் தேர்வு போல்மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை அறிந்துகொள்ளும் வகையில் இத்தேர்வை நடத்தவேண்டும். மேலும், ஆசிரியர்கள் பாடத்தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை பொதுத்தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும். அதோடு, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவ, மாணவிகளிடம் அளித்துசரிபார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment