ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக
தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பியூன்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்கள் அளிக்க செப்டம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கான புதிய படிவத்தில், அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள், விமானம், படகுகள் அல்லது கப்பல்கள், தங்கம்-வெள்ளி நகைகள் மற்றும் தங்க கட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் தனி பத்தி உள்ளது.
மேலும் ரொக்கப்பணம் தொடர்பான விவரங்கள், வங்கி வைப்புத்தொகை, பத்திரங்கள், கடனீட்டு பத்திரங்கள், கம்பெனிகள் மற்றும் பரஸ்பர நிதியங்களின் பங்குகள் மற்றும் அலகுகள், காப்பீட்டு பாலிசிகள், வருங்கால வைப்பு நிதி மற்றும் தனிநபர் கடன்கள் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

0 comments:
Post a Comment