Sunday, 24 August 2014

பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு.

கடந்த 2012ம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம்,இசை, மற்றும் தையல் கல்வி கற்பிக்க, மாநிலம் முழுவதும் 16,549பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திருப்பூர் மாவட்டத்தில் 543 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாதந்தோறும் மதிப்பூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வாரத்தில் மூன்றுஅரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்பது விதிமுறை.பகுதிநேர ஆசிரியர்களின் மதிப்பூதியத்தை 2,000 ரூபாய் வரை உயர்த்த, அரசு தரப்பில் ஆலோசிப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது, மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர் விவரம்,பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர் தேவையாக உள்ள காலி பணியிடம் குறித்த விவரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதனால், கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

0 comments:

Post a Comment