Saturday, 23 August 2014

கடலூர் தலைமை ஆசிரியர் ரா.நடராஜனுக்கு ’பால சாகித்ய அகடமி’ விருது!

2014-ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது கடலூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரும், சிறுவர்களுக்கான பல்வேறு நூல்களை எழுதியுள்ள நூலாசிரியருமான இரா.நடராசனுக்கு  (வயது 50)
வழங்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. இவர் எழுதிய ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக இந்த விருது ரா.நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கதைகள் மட்டுமல்லாமல், கதைகள் மூலம் அறிவியில், கணிதம் உள்ளிட்ட சமூக அக்கறை விஷயங்களை உள்ளிடக்கி பல்வேறு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment