Sunday, 31 August 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

2013 ஜூலை முதல் 2014 ஜூன் வரை தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை உயர்த்துவதற்கான பரிந்துரையை நிதித்துறை அமைச்சகம் , மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது. முன்னதாக ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.

0 comments:

Post a Comment