This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Tnppgta. Show all posts
Showing posts with label Tnppgta. Show all posts

Tuesday, 16 December 2014

TNPPGTA.COM வின் பார்வையாளருக்கு மனமார்ந்த நன்றி


மிக மிக குறுகியகாலத்தில் 1,00,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம், இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றியினை
திரு M.தமிழ்வளவன் பட்டதாரி ஆசிரியர் ஏரியூர் ,
அகரம் இணையதள வடிவமைப்பு,காரைக்குடி , 9443613614
மற்றும் அனைத்து பார்வையாளருக்கும் TNPPGTAவின் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து உங்களது நல் ஆதரவை விரும்புகின்றோம்

பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் துவக்க விழா - DINAMANI

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் துவக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

துவக்க நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்:
2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணியேற்ற நாளிலிருந்து பணி வரன் முறை செய்து, பணப்பலன் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட புதிய நிர்வாகிகளாக, இல.நாகராஜன்(தலைவர்), வீ.முருகப் பெருமாள்(செயலர்), பெ.சோமசுந்தரம்(பொருளாளர்), கே.பூங்காவனம்(அமைப்புச் செயலர்), கார்த்திகா(மகளிர் அணி) ஆகியோரும், தலைமையிடத்துச் செயலராக எம்.ராஜா மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

Wednesday, 10 December 2014

TNPPGTA - MEETING AT KALLKURUCHI

Saturday, 29 November 2014

கருப்பு பேட்ஜ் அணிந்து பணி - DINAMALAR

கச்சிராயபாளையம்: பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
கடந்த 20 ம் தேதி தாக்கப் பட்டார். இதனை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல முடிவு செய்யயப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையிலான ஆசிரியர்கள் குதிரைச்சந்தல் அரசு உயர் நிலை பள்ளியில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் - DINAMANI

சென்னையில் பள்ளியில் புகுந்த கும்பல் ஆசிரியரை தாக்கியதைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாஸ்கர்ராஜ். இவரை கடந்த (20.11.14) வெள்ளிக்கிழமை பள்ளிக்குள் நுழைந்த கும்பல் அடித்தும் பெண் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வகுப்பறையில் இருந்த தளவாட பொருள்களை சேதப்படுத்தியும் சென்றனராம்.
இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவருமான பொன்.செல்வராஜ் தலைமையில் வகுப்புக்கு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

Thursday, 27 November 2014

பணி பாதுகாப்பு வழங்கிட கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்ற முடிவு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டை, : தமிழகத்தில் அனை த்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வழங்கிட கோரி தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி மேற்கொள்ள உள்ளனர். 

 இது குறித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் பிச்சைவேல் விடுத்துள்ள அறிக்கை: கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் என்பவரை அப்பள்ளியில் பயின்ற 8ம் வகுப்பு மாணவர் அர்னால்டுவின் தந்தை அருளானந்தத்தின் தூண்டுதலின் பேரில் 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் பள்ளி வளாகத்திலேயே தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பணி பாதுகாப்பு வழங்கிட கோரியும், தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று (28ம் தேதி) கறுப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்று வழக்கமான கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPPGTA HAS DECIDED TO WEAR BLACK BATCH TOMORROW 28/11/2014 TO CONDEMN THE INCIDENT OF ATTACK BY A MOB IN LOYOLA SCHOOL CHENNAI - STATE PRESIDENT MR.PON.SELVARAJ

TNPPGTA HAS DECIDED TO WEAR BLACK BATCH TOMORROW 28/11/2014 TO CONDEMN THE INCIDENT OF ATTACK BY A MOB
IN LOYOLA SCHOOL CHENNAI - STATE PRESIDENT MR.PON.SELVARAJ

Tuesday, 4 November 2014

ஐஐடி உயர்கல்விக்கான தகுதி பெற பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக பள்ளி மாணவர்களும் அதிகளவில் சேர்ந்து பயிலத் தேவையான தகுதியைப் பெற பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தி, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை பிளஸ் 2 வகுப்பின் இறுதியில் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பதவியுயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தச் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் தலைமையில் நாமக்கல் எஸ்பிஎம் உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர முடிவதில்லை. இதற்கு தமிழக பள்ளிக் கல்வியில் நிகழும் குறைபாடுகளே முக்கியக் காரணமாகும். அத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்கவும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியைப் பெறவும் அரசு பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை
பிளஸ் 2 வகுப்பின் இறுதியில் வழங்க வேண்டும்.
மேலும், மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி சேர்க்கையில் அதிகளவில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 60 சத இடஒதுக்கீடும், சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 40 சத இடஒதுக்கீடும் வழங்க நிகழாண்டிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.
தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நேரத்தை வீணாக்காமல் தடுக்கவும் கல்லூரிகளில் உள்ளதைப் போல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளிலும் மொழிப் பாடத்துக்கு ஒரே தாள் என மாற்றி, தற்போதுள்ள 8 தேர்வுகளை 6 தேர்வுகளாகச் சுருக்கிட வேண்டும். தமிழகத்திலுள்ள சுயநிதிப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் கலைப் பாடப் பிரிவு தொடங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற 15 ஆண்டுகால பணி அனுபவம் தேவை என்ற விதிமுறையைத் தளர்வு செய்து, முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் விகிதாசாரத்துடன், குறைந்தது ஒரு கல்வி மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் பணித் திறனை மேம்படுத்தவும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை ஏழை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக் கணினி வழங்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை இணையவழியிலேயே பதிவு செய்யவும், அந்தக் கோரிக்கையின் தற்போதைய நிலை குறித்து அறிய ஒப்புகைச் சீட்டு எண்ணை அளிக்கும் நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்த வேண்டும்.
அரசுக் கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தகுதி வாய்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு 50 சத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநிலப் பொதுச்செயலர் க.இளங்கோவன் செயல்பாடுகளையும், மாநிலப் பொருளாளர் ப.தமிழ்மணியன் ஆண்டறிக்கையும் வாசித்தனர். மாநில அமைப்புச் செயலர் சி.பிரபாகரன், மாநில பிரசார செயலர் தி.கார்த்திகேயன், மாநிலத் தலைமையிடச் செயலர் டி.சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் வி.எஸ்.பிச்சைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, 1 November 2014

Friday, 31 October 2014

மிக மிக குறுகியகாலத்தில் 50,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம்

மிக மிக குறுகியகாலத்தில் 50000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம், இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றிகளை
திரு M.தமிழ்வளவன் பட்டதாரி ஆசிரியர் ஏரியூர் ,
அகரம் இணையதள வடிவமைப்பு,காரைக்குடி , 9443613614
மற்றும் அனைத்து பார்வையாளர்களுக்கும் TNPPGTA வின் மனமார்ந்த நன்றிகள்



தொடர்ந்து உங்களது நல் ஆதரவை விரும்புகின்றோம்

Saturday, 27 September 2014

FLASH NEWS; TNPPGTA GENERAL BODY MEETING WHICH WAS SCHEDULED TO BE HELD ON 28/09/2014 (TOMORROW) IS BEING POSPONED. DATE WILL BE INFORMED LATER

TNPPGTA GENERAL BODY MEETING WHICH WAS SCHEDULED TO BE HELD ON 29/09/2014 (TOMORROW)  IS BEING POSPONED. DATE WILL BE INFORMED LATER

Wednesday, 24 September 2014

TNPPGTA STATE LEVEL GENERAL BODY MEETING TO BE HELD AT NAMAKKAL ON 28/09/2014

TNPPGTA GENERAL BODY MEETING TO BE HELD AT SBM HIGH SCHOOL, NAMAKKAL (NEAR POLICE STATION) TRICHY MAIN ROAD ON 28/09/2014 AT 10AM. ALL ARE INVITED.

CLICK HERE FOR INIVITAION

Sunday, 21 September 2014

TNPPGTA STATE LEVEL GENERAL BODY MEETING TO BE HELD AT NAMAKKAL ON 28/09/2014

TNPPGTA GENERAL BODY MEETING TO BE HELD AT SBM HIGH SCHOOL, NAMAKKAL (NEAR POLICE STATION) TRICHY MAIN ROAD ON 28/09/2014 AT 10AM. ALL ARE INVITED.

CLICK HERE FOR INIVITAION

Sunday, 13 July 2014

OUR BLOG HAS BEEN CONVERTED INTO WEBSITE WITH ADDRESS - www.tnppgta.com

OUR WEB ADDRESS IS CHANGED TO www.tnppgta.com