Thursday, 25 September 2014

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை தகவல் - நாளை பணியில் சேர உத்தரவு

இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்குஇன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வுமையங்களில் நியமன ஆணை வழங்கப்படும்என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையால், கடந்த ஒன்றாம் தேதிமுதல் 5-ம் தேதி வரை
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் பங்கேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள்அனைவருக்கும் இன்று பிற்பகல் முதல்சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அனைத்துபணிநாடுநர்களும் சம்பந்தப்பட்ட மையத்திற்குச் சென்று பணிநியமன ஆணையைபெற்று, உடனடியாக பள்ளிகளில் பணியேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்விஅலுவலகத்திற்கு, அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன்சென்று ஒதுக்கீட்டு மற்றும் நியமன ஆணைகளைபெற்றுக்கொள்ளலாம் என தொடக்க கல்விஇயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.p

0 comments:

Post a Comment