பத்தாம்வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கிலவழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள்பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின்பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச்சேர்த்து, கல்வித் துறை குழப்பம்செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்புநாட்டின் பெயரை
சேர்க்கவும், கல்வித்துறை மறந்து உள்ளது.சமச்சீர்கல்வி பாட திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ளசமூக அறிவியல், ஆங்கில வழி பாடபுத்தகம், பக்கம் 46ல், ஐரோப்பிய யூனியன்அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்புநாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஆஸ்திரியாவில் துவங்கி இங்கிலாந்து வரை, 27 நாடுகள் இடம் பெற்றுள்ளன. உண்மையில், 28 நாடுகள், உறுப்பு நாடுகளாக உள்ளன; குரேஷியா விடுபட்டுள்ளது.மேலும், 15வது உறுப்பு நாடாக, லைபீரியா குறிப்பிடப்பட்டுள்ளது. லைபீரியா, ஆப்ரிக்காவில் உள்ளது. லைபீரியாவிற்கு பதிலாக, லாட்வியா என்ற நாட்டின் பெயர்இடம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிகுளறுபடியான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் மாணவர்களும், தவறானகருத்துக்களை படிக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறுகையில், 'மாணவர்களுக்கு, தவறான வரலாற்றை கூறக் கூடாது. இதில், எந்த சாக்கு போக்கும் கூறக்கூடாது. சாதாரண தவறு எனவும்கூறக் கூடாது. பாட புத்தகம்அச்சடிப்பதற்கு முன், ஒன்றுக்கு பலமுறைசரிபார்த்திருக்க வேண்டும்' என, தெரிவித்தனர்.
பாட புத்தகங்களை எழுதுதல் மற்றும் சரிபார்க்கும் பணியை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் செய்கிறது. அந்நிறுவன வட்டாரம் கூறியதாவது:ஆசிரியர் குழுவினர், கவனமில்லாமல் செயல்பட்டதன் காரணமாக, இந்த தவறு நடந்துள்ளது. இந்த தவறை சரிசெய்ய, நடவடிக்கைஎடுக்கப்படும். மேலும், அடுத்த கல்விஆண்டில் வழங்கும் பாட புத்தகத்தில், சரியானகருத்துக்கள் இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்வோம்.இவ்வாறு, நிறுவன வட்டாரம் தெரிவித்தது.
0 comments:
Post a Comment