இந்தியாவின்முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில்
தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் குஜராத் மாநில அரசும்மனித வள நிறுவனமான டீம்லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த பல்கலைக்கழகத்தை
உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில்4 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். டீம்லீஸ்ஸ்கில்ஸ் பல்கலைக் கழகம் (டிஎல்எஸ்யு) முதல்கட்டமாக மூன்று பிரிவுகளில் சிறப்புபயிற்சிகளை அளிக்கிறது. மெகடிரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஹார்ட்வேர், நிதி மற்றும் வர்த்தக செயல்பாடுகுறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் சில்லறைவர்த்தகம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்குறித்த பயிற்சிகளையும் அளிக்க உள்ளது. இந்தபல்கலைக் கழகத்தில் இப்போது 20 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக தொழில்பயிற்சி பல்கலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடு மற்றும் இதுகுறித்து வெளியாகும்விமர்சனங்களின் அடிப்படையில் இதை படிப்படியாக விரிவுபடுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சிஅளிக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக இணை நிர்வாகி ரிதுபர்னாசக்ரவர்த்தி தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில்இந்நிறுவனம் ரூ. 50 கோடியை முதலீடுசெய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். டிஎல்எஸ்யுபல்கலை கார்ப்பரேட் கல்வி, கிளவுட் அடிப்படையிலானபயிற்சி, என்இடிஏபி (பயிற்றுநர் பயிற்சித் திட்டம்) மற்றும் வளாக பயிற்சிஉள்ளிட்டவற்றை அளிக்கிறது. அமெரிக்காவில் செயல் படும் சமுதாயக்கல்லூரி அடிப்படையில் இது உருவாக் கப்பட்டுள்ளது. இளங்கலைப் பட்டம் பெறும் வகையில்6 பருவத் தேர்வுகளைக் (செமஸ்டர்) கொண்டது. நான்கு செமஸ்டர்களைப் பூர்த்திசெய்த மாணவருக்கு அசோசியேட் பட்டம் வழங்கப்படும். முதலாண்டுமுடிக்கும் மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்படும். தொழில்கல்விபயில சேரும் மாணவர்கள் அதிகமதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ப தில்லை. மாணவர்களுக்குஅவர் களது வசதிக்கேற்ப படிப்புமற்றும் தொழிற்கல்வியைக் கற்றுத் தருவதே பிரதானநோக்கம் என்று சக்ரவர்த்தி கூறினார். இதனால் முதலாண்டு முடித்த மாணவர்களுக்கு பயிற்சிமுடிப்பு சான்றிதழ் அளிக்கப்படும். அவர் அதைக் கொண்டுவேலையில் சேர முடியும். மீண்டும்தனது படிப்பைத் தொடர விரும்பினால் அவர்முதலாண்டில் சேர வேண்டியதில்லை. அவர்இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடரலாம். இதேபோல விடுபட்ட ஆண்டிலிருந்து படிப்பைத் தொடரலாம். தாற்காலிக பணி வழங்குவதில் டீம்லீஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலம்ஒரு லட்சம் பேர் பல்வேறுநிறுவனங்களில் பணி புரிகின்றனர். திறமையானபணியாளர்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்த தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்தான் பள்ளிக் கல்வியை பாதியில்விடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 12-வதுபடிப்பை எட்டுவதற்குள் 10 மாணவர்களில் 6 பேர் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இந்தியாவில் உயர் பதவிகள், அதிகாரிகள்உள்ளிட்ட பணிகளை மட்டுமே உள்ளடக்கியதாககல்வி முறை உள்ளது. ஆனால்இதன் மூலம் வேலை வாய்ப்புபெறுவோர் 8 சதவீதம் மட்டுமே. 92 சதவீதம்பேருக்கு பிற தொழில்களின் மூலம்தான்வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த தொழில் கல்வியைப்பயில ஒரு செமஸ்டருக்கு ரூ. 22 ஆயிரம் கட்டணமாகும். இத்தொகையை மாணவர்கள் செலுத்துவதற்கு வசதியாக சில நிதிநிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகரிது பர்னா தெரிவித்தார். இந்தபல்கலையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்குபிளஸ் 2-வுக்கு இணையான கல்வித்தகுதி மற்றும் தொழில் பயிற்சிதகுதியை இந்த பல்கலைக் கழகம்அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment