Tuesday, 30 September 2014

பள்ளி விபரங்களை அக்.,8க்குள் சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

விருதுநகர் : ""பள்ளி சார்ந்த அனைத்து விபரங்களையும் அக்.,8க்குள் படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்,'' என, தலைமையாசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அனைத்து நிர்வாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டத்தில் அவர்களின் பள்ளி சார்ந்த அனைத்து விபரங்கள் சார்பாக அதற்கான க்ஈஐகுஉ படிவத்தில் பூர்த்திசெய்து அக்.,8க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. காலாண்டுத்தேர்வு முடிவுகளை தீதீதீ.ஞிடடிஞுஞூஞுஞீதஞிச்tடிணிணச்டூணிஞூஞூடிஞிஞுணூ.டிண என்ற இணையதளத்தில் அக்.,11 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு குறித்தும், நீர்நிலைகள், உயர்மின்அழுத்த கம்பிகள் மற்றும் வெடிவிபத்துக்கள் போன்றவைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் வலியுறுத்தப்பட்டது. 6,7,8ம்வகுப்பு மாணவர்களின் அடிப்படைத்திறன் மற்றும் வாசிப்புத்திறனை அதிகரிக்க போதியபயிற்சியளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்றும், இன்றும்(அக்.,1) விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் புத்தாக்க பயிற்சியளிக்கப்படுகிறது. அதில் பள்ளி நடைமுறைகள், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து விளக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment