புதுடெல்லி, செப்.6-டெல்லி விழாவில், 357 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “கல்வி தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்” என அறிவுறுத்தினார்.
ஆசிரியர்கள் ஒளிவிளக்குநாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்வித்துறையில் சாதனை படைத்த 357 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-ஆசிரியர்களை மாணவர்கள் ஆதர்ஷ வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். மாணவர்களின் கல்விப்பருவம் முழுவதும், ஏன் அதையும் தாண்டி அவர்களை வழிநடத்தி, ஒளிவிளக்காக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்த...தற்போது அளிக்கப்பட்டு வருகிற கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இன்றைக்கு நாட்டுக்கு தேவை இன்னும் அதிகளவில் தகுதியும், விருப்பமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. கல்வித்தரத்தினை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். எதிர்கால இந்தியாகுழந்தைகள்தான் எதிர்கால இந்தியா. அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் வலுவான, துடிப்பான, ஆற்றல் வாய்ந்த இந்தியாவை கட்டமைக்க முடியும். குழந்தைகள், தங்களது ஆரம்ப கட்டத்தில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களது இளம்மனங்களில், மதிப்புணர்வு, ஒழுக்கம், சமப்பணம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பதிய வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.கூடுதல் நிதிஇந்தியாவை மாற்றும் மகத்தான சக்தியாக வளமான, தரமான கல்வி முறை திகழும். உலக நாடுகளில் இந்தியாவை அவை முன்னிலையில் நிறுத்தும். நமது நாட்டில் கல்விக்கு கூடுதல் முதலீடுகள் செய்கிறோம். 2014-15 நிதி ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டில் ‘சர்வ சிக்ஷா அபியான்’ கல்வி திட்டத்துக்கு ரூ.29 ஆயிரம் கோடியும், ‘ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான்’ கல்வி திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களின் வழிகாட்டுதல், குழந்தைகளை திறன்வாய்ந்தவர்களாக, அறிவார்ந்தவர்களாக, உலகளவில் மதிப்பு வாய்ந்த குடிமக்களாக உருவாக்கும் அளவில் அமைய வேண்டும். இந்தியாவுக்கு சவால்இன்றைய உலகில் வன்முறை, தீவிரவாதம், சகிப்புத்தன்மையின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு சவால்கள் உள்ளன. உண்மையின் மதிப்பு, சகிப்புத்தன்மை, நேர்மை, மதச்சார்பின்மை போன்றவை நமது குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் உலகத்தை வாழ்வதற்கு பாதுகாப்பானதாக, சிறந்த இடமாக ஆக்குவார்கள்.இந்தியாவில் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருப்பது, கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதும், நமது பள்ளிக்கூடங்களில் தரமுடன் கற்று வெளியே வருவதும்தான். இதை நமது ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தாமலும், அறிவை விருத்தி செய்யாமலும், தேசத்தின் வளர்ச்சியில் சம பங்காளிகளாக ஆக்காமலும் சாதித்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பிரதமர் புகழாரம்ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம் சூட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஆதர்ஷ சக்தியாக இன்றைக்கும் விளங்குகிறார்” என கூறியுள்ளார்.ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பான வாழ்த்துச் செய்தியில் அவர், “அறிவு தீபத்தை ஓய்வு ஒழிச்சலின்றி ஏற்றி வைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment