எக்ஸ்எல்ஆர்ஐ, லிபா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நூற்-றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எக்ஸ்ஏடி என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள பிரபல மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனமான எக்ஸ்எல்ஆர்ஐ என்று அழைக்கப்படும் சேவியர் லேபர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் சேர விரும்பும் மாணவர்கள் அந்த நிறுவனம் நடத்தும் Xavier Aptitude Test – XAT என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
லிபா என்று அழைக்கப்படும் லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (சென்னை), எக்ஸ்ஐஎம்இ (பெங்களூரு), செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பெங்களூரு), சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஜபல்பூர்), செயின்ட் பிரான்சிஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச் (மும்பை) உள்பட நூற்றுக்கு மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களும் XAT நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஏதாவது பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 1.30 மணி வரை இந்த நுழை-வுத் தேர்வு நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக இருந்த தேர்வு முறையே வரும் நுழைவுத் தேர்விலும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெர்பல் அண்ட் லாஜிக்கல் எபிலிட்டி, டெசிஷன் மேக்கிங், குவான்டிடேட்டிவ் எபிலிட்டி அண்ட் டேட்டா இன்டர்பிரட்டேஷன், பொது அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். அத்துடன் கட்டுரையும் எழுத வேண்டியதிருக்கும். இந்தக் காகிதத்தில் எழுதும் தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணிநேரம் வழங்கப்படும். இந்த நுழைவுத்தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வருகிற நவம்பர் 22--ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. இத்தேர்வு குறித்த விரிவான தகவல்களுக்கும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

0 comments:
Post a Comment