Wednesday, 17 September 2014

தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில்வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகரூர்மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில்ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம்பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார்அந்தநேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலைவழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார்எனினும் அவருக்கு வேலைவழங்கப்படவில்லை.
 
         இந்நிலையில் 18 வயதைக் கடந்த அழகேசன்தனது தந்தைஉயிரிழந்ததால் தனக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும் எனக் கோரி விண்ணப்பித்தார்எனினும் தந்தை உயிரிழந்தபோதுஅழகேசன் சிறுவனாக இருந்ததால் அவருக்கு பணி வழங்க முடியாது என கடந்த2012-ம் ஆண்டில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 
         இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதிஅவருக்கு கருணைஅடிப்படையில் பணி வழங்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

             இதனை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது.மனுதாரரின் தந்தை உயிரிழந்தபோது அவர் சிறுவனாக இருந்தார்வேலைவேண்டி விண்ணப்பித்த அவரது தாயார் தேவையான ஆவணங்களை தாக்கல்செய்யவில்லைமேலும்தனக்குப் பதிலாக மகனுக்கு வேலை வழங்குமாறு கோரிமனுதாரரின் தாயார் கூறவில்லைஆகவேஅவருக்கு பணி வழங்குமாறு தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டதுஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்கே.அக்னிஹோத்ரிநீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அரசுத் தரப்பு வாதத்தைஏற்க மறுத்து விட்டனர்மனுதாரரின் தந்தை உயிரிழந்தவுடன் அவரது தாயார்வேலை கோரி விண்ணப்பித்தார்அவரது விண்ணப்பம் அப்படியே நிலுவையில்இருந்ததுஇந்நிலையில் தாயாருக்குப் பதில் தனக்கு வேலை தர வேண்டும் எனகோரி மகன் விண்ணப்பித்தார்தனக்குதான் வேலை வேண்டும் என தாயார்வற்புறுத்தவில்லைமகனுக்கு வேலை வழங்குவதை அவர் விரும்புகிறார்.
 

          இந்நிலையில் தாயாரின் விண்ணப்பத்தை காரணம் காட்டி மகனுக்கு வேலைதர மறுக்க இயலாதுகருணை அடிப்படையில் வேலை என்பது உயிரிழந்த அரசுஊழியரின் ஒட்டுமொத்த குடும் பத்தை பாதுகாக்கதானே தவிரஅந்தக்குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்காக மட்டும் அல்லஆகவேதனி நீதிபதிபிறப்பித்த உத்தரவு சரியானதேஅரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment