Wednesday, 3 September 2014

ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுநல வழக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, செப்.4-ஆசிரியர் பணியில் மாற்றுத்திறனாளிக்கான பின்னடைவு காலிப்பணியிடத்தை நிரப்பக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.நம்புராஜன்.
இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன்.ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்பவேண்டிய பின்னடைவு காலிப்பணியிடங்களின் விவரங்களை தமிழக அரசு கடந்த மார்ச் 4-ந் தேதி அரசாணையாக வெளியிட்டது.அதில், ஆசிரியர் பணியில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்பவேண்டிய 1,107 பின்னடைவு காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பின்னடைவு காலிப்பணியிடங்களை இதுவரை அரசு நிரப்பவில்லை.அறிவிக்கை இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நேரடி தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஜூலை 14-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின்படி, பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு நடத்தப்பட்டால், மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்கவேண்டிய பணி வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும்.எனவே, பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நேரடியாக தேர்வு நடத்துவது தொடர்பாக ஜூலை 14-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.நோட்டீசுமாற்றுத்திறனாளிகளுக் கான பின்னடைவு காலிப்பணியிடங்களை முதலில் நிரப்பிவிட்டு, அதன்பின்னர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து புதிய அறிவிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதிட்டார்.இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment