Wednesday, 3 September 2014

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யாவிட்டால் படிப்பு சான்றிதழ்களை கல்வி அதிகாரிகளிடம் நாளை ஒப்படைப்போம் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு


சென்னை, செப்.4-ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யாவிட்டால் நாங்கள் படித்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட். உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர் தினமான நாளை (5-ந் தேதி) ஒப்படைப்போம் என்று ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும்ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முன்பு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தற்போது தகுதித்தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் மற்றும் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களையும் சேர்த்து கணக்கிட்டு அதில் வரும் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைத்து அந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்ட பி.எட். படித்த மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படித்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.அவர்கள் கடந்த சில நாட்களாக தினமும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.சான்றிதழ் ஒப்படைக்கும் போராட்டம் இந்த கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர் தினமான 5-ந் தேதி (நாளை) காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி நாங்கள் படித்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 சான்றிதழ்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், பி.எட். சான்றிதழ் ஆகியவற்றை கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். மேலும் வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்துச்சென்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஒப்படைப்போம்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment