Saturday, 16 August 2014

TET க்கு இடைக்காலத் தடை.BRTE வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.

இத்துடன் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய நகல் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் BRTE ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் BRTE ஆசிரியர்கள் குறித்து முடிவெடுக்க அரசுக்கு அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டது.

அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு" சம்பந்தமாக ஏற்கனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது அக்டோபர் 7 ம் தேதி வரை  அமலில் இருக்கும்  என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.




ஆனால் இந்த தடை அமலில் இருக்கும் பொழுதுதான் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத்  தேர்வுப் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

அதோடு PG தமிழுக்கான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும்.PG தமிழ் B வகை வினாவினை எதிர்கொண்டத் தேர்வர்களுக்கு 20 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.மாறாக மற்ற பாடப்பிரிவைக் காட்டிலும் அவர்களுக்குத்தான் முதலில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

தகவல்: மாவட்டத்தலைவர்: அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்டம்.

0 comments:

Post a Comment