சென்னை, செப்.8-தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் 19 உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்தது. வகுப்புகளும் தொடங்கி விட்டன. இந்த நிலையில்
கல்லூரியில் சேராத மாணவர்கள் உள்பட மொத்தம் 64 இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கனவே சேர்ந்த பலர் கலந்து கொண்டு அரசு கல்லூரியில் சேர முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 12 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வும் இன்று நடக்கிறது. கலந்தாய்வு 10-ந் தேதி முடிவடைகிறது.இந்த தகவலை தமிழ்நாடு மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment