Tuesday, 2 September 2014

24ல் செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான்

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் 300 நாள் பயணத்தை முடித்துள்ளது.
திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸி450

கோடியிலான மங்கள்யான் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 5&ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. மொத்தம் 68 கோடி கி.மீ. தூர பயணத்தில் தற்போது 62.2 கோடி கி.மீ. பயணத்தை அது முடித்துள்ளது.

நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் மங்கள்யான், பூமியில் இருந்து 19.9 கோடி கி.மீ. தூரத்தில் தற்போது உள்ளது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கி.மீ. ஆகும்.

0 comments:

Post a Comment