Tuesday, 2 September 2014

இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் மாவட்டங்களுக்குள் பணி நியமனம்

இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் அவரவர் மாவட்டங்களுக்குள்ளாகவே பணி நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற்றனர்.

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு ஆன்-லைன் மூலமாக தமிழகம் முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற மாவட்டங்களுக்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 795 பேர் பணி நியமனம் பெற்றனர். இரண்டாம் நாளில் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றதாகத் தொடக்கக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, பெரம்பலூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என தொடக்கக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment