சென்னை, செப்.3- சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தில் உள்ள பல்லவன் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவில், “1997-ம் ஆண்டு முதல் எங்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
கல்லூரியின் கட்டிடத்துக்கு திம்மசமுத்திரம் பஞ்சாயத்திடம் முறையான அனுமதிப் பெற்றுள்ளோம். சொத்து வரியும் இதுவரை செலுத்தியுள்ளோம். இந்த நிலையில், எங்கள் கல்லூரியில் உள்ள முதல்வர் அறை, அலுவலக அறை ஆகியவற்றை காஞ்சீபுரம் மாவட்ட நகரமைப்புத் திட்ட அதிகாரி ‘சீல்’ வைத்து பூட்டி விட்டார். இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு எந்த விளக்க நோட்டீசும் எதுவும் வழங்கவில்லை என்று கூறியிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிசந்திரபாபு ஆகியோர், ‘கல்லூரி அலுவலகத்தை இழுத்து மூடி வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட வேண்டும். நகரமைப்பு திட்ட அதிகாரி புதிதாக நோட்டீசு வழங்கி, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளும் போது, மனுதாரர் தகுந்த அமைப்பிடம் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்’ என்று உத்தரவிட்டார்கள்.
0 comments:
Post a Comment