Monday, 8 September 2014

Court Case Detail - PG Asst Promotion For Middle School B.Ts

  2004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.
                       அரசாணை 720 நாள் 28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் முன்பாக இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. வீக்லி லிஸ்ட் ல் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் , நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறோம்-
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

0 comments:

Post a Comment