Wednesday, 3 September 2014

வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, செப்.4-தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. வெயிட்டேஜ் முறைஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2,
பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்குஇந்த நிலையில் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-நான், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண், பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் (‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கிடும் முறை தொடர்பாக 30.5.2014 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான், 1996-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு கற்பித்தல் அனுபவம் உள்ளது. 2000-ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1000 மதிப்பெண் பெறுவது என்பது கடினமானதாக இருந்தது. வெவ்வேறு விதமான பாடத்திட்டங்கள்தற்போது 1200-க்கு 1195 மதிப்பெண்கள் பெறும் நிலை உள்ளது. 2000-வது ஆண்டுக்கு முன்பு பிளஸ்-2 பாடத்திட்டம் கடினமாக இருந்தது. அதே போன்று கற்பித்தல் முறையும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. தற் போது மதிப்பெண் அதிகமாக பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதே போன்று பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெவ்வேறு விதமான பாடத்திட்டங்களை வைத்துள்ளன. சில பல்கலைக்கழகங்களில் எளிதான பாடத்திட்டங்கள் உள்ளன. அதுபோன்ற பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பர். எனவே, ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறை பாரபட்சமானதாகவே இருக்கும். எனவே, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்காக வெயிட்டேஜ் மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லாதபட்சத்தில் கற்பித்தல் அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ஆகியவற்றையும் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும் 17 பேர்இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா காதக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராமக்கண்ணன், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பவுசிநேசல் பேகம் உள்பட 17 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் டி.லஜபதிராய், டி.ஏ.எபனேசர், கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தற்போது ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங் நடந்து வருவதாக தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-பணி நியமனத்துக்கு தடை “பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், தொடக்க கல்வித்துறை செயலாளர் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.”இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்கடந்த 2013-ம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணிக்காக தகுதித்தேர்வு எழுதியவர்களில் 30,592 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதியவர்களில் 42,109 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் இருந்து 10,698 பட்டதாரி ஆசிரியர்களையும், 1654 இடைநிலை ஆசிரியர்களையும் பணி அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. நியமனத்துக்காக வெயிட்டேஜ் மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லாதபட்சத்தில் கற்பித்தல் அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ஆகியவற்றையும் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும் 17 பேர்இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா காதக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராமக்கண்ணன், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பவுசிநேசல் பேகம் உள்பட 17 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் டி.லஜபதிராய், டி.ஏ.எபனேசர், கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தற்போது ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங் நடந்து வருவதாக தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-பணி நியமனத்துக்கு தடை “பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், தொடக்க கல்வித்துறை செயலாளர் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.”இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்கடந்த 2013-ம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணிக்காக தகுதித்தேர்வு எழுதியவர்களில் 30,592 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதியவர்களில் 42,109 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் இருந்து 10,698 பட்டதாரி ஆசிரியர்களையும், 1654 இடைநிலை ஆசிரியர்களையும் பணி அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment