Wednesday, 17 September 2014

சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள்.

 ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலான சமச்சீர் பாடத் திட்டத்தின், முப்பருவபாடத்திட்டத்தில், ஒரு பருவ பாடத்தை, கற்றுணர்ந்து, அதை ஆடியோ சிடியாகதயாரித்துள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரிமாணவிகள்.கருவாய் உருவாகி, உருவாய்அரங்கேறி, பருவங்கள் பல தாண்டி, வருங்காலவாழ்வை நோக்கி ஒவ்வொருவரும் நடைபயில்கிறோம்.


லட்சியங்கள்கைக்கு எட்டும் துாரத்தில், இருந்தும்அலட்சியப்படுத்துகிறோம். தடைகள் ஓராயிரம், சாதிக்கதன்னம்பிக்கை ஒன்றுதான் பேராயுதம் எனக் கூறி, தன்னம்பிக்கைஆயுதத்தை மட்டும் கையில் வைத்து, பார்வையற்ற மாணவர்களுக்காக 20 நாட்கள் கஷ்டப்பட்டு, ஆறுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலானசமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை, சாதனைக்குசாதனம் ஒரு பொருட்டல்ல எனக்கூறி, மொபைல் வழி வாய்ஸ்ரெக்கார்டரில் பதிவுசெய்து, சி.டி.யாகமாற்றி, அதை திருப்பத்துார் டி..எல்.சி., சிறப்பு பள்ளியில் உள்ள, பார்வையற்ற பள்ளிமாணவர்களுக்கு, இலவசமாக வரும் 19-ம்தேதி வழங்க உள்ளனர் காரைக்குடிஉமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரியை சேர்ந்தமாணவிகள்.குரலில் சிறந்த 80 மாணவிகள்தேர்வு செய்யப்பட்டனர். 6 முதல் 8 ம் வகுப்புவரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களை, கணிதத்தை தவிர, மற்ற பாடங்களைநான்கு குழுவாக பிரிந்து படித்துபுரிந்து கொண்டனர்.அதை தொடர்ந்து, அவற்றைரிக்கார்டிங் செய்ய, தங்கள் மாணவிகளிடம்உள்ள சிறந்த மொபைல்களை தேர்வுசெய்து, ஒரு மாணவி புத்தகத்தைவாசிக்க, மற்றொரு மாணவி, மொபைலைபிடிக்க என ரிக்கார்டிங் தொடர்ந்தது. பறவைகளின் சத்தம், விலங்குகளின் சத்தத்தைஅறிய, மாணவிகளே மிமிக்ரி கொடுத்தனர்.மாணவிகள் தேவி அபிநயா கூறும்போது: "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு, மாடல்லமற்றயவை" என்பது கல்வியின் சிறப்பைகூறும் திருக்குறள்.
ஒருவர்எல்லா செல்வம் பெற்றிருந்தாலும், கல்விசெல்வமே சிறந்த செல்வமாகும். அந்தவகையில், கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி உதவியுடன், ஆங்கிலத்துறை தலைவர் அழகு மீனாள், ஆசிரியர்கள் சுந்தரி, சுதா, தாரகை ஆகியோர்தலைமையில், பார்வையற்ற மாணவர்களுக்காக, சமச்சீர் பாடத்திட்டத்தை, ஆடியோ சி.டி.,யாக பதிவு செய்துள்ளோம்.ஒவ்வொரு கேள்வியும், பதிலும்இரண்டு முறை வாசிக்கப்படும். பாடத்தைபுரிந்து கதை சொல்வது போலவும், பாடுவது போலவும், முழு மனதுடன் செய்துள்ளோம்.தற்போது, அரசு பள்ளிகளில் வாசிப்புதிறன் குறைவாக உள்ளது. அந்தவாசிப்பு திறனை மேம்படுத்தவும், இந்தசி.டி.,யை பயன்படுத்தலாம். ஏற்கனவே நர்சரி படிப்புக்கான ஆடியோசி.டி. தயாரித்து வெளியிட்டுள்ளோம். ஒரு வகுப்புக்குரிய தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும், இரண்டரை மணி நேரம்ஓடும். இதற்கு டாக்கிங் புக்லைப்ரரி என பெயர் வைத்துள்ளோம், என்றார்.முதல்வர் ஹேமாமாலினி கூறும்போது: செய்முறை பயிற்சியை, நோட்டில் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்து, தாங்கள் மட்டுமே வைத்து கொள்வதால்எந்த பயனும் இல்லை. படிக்கும்காலத்தில் பிறருக்கு உதவ வேண்டும். இன்றைக்குஎன்ன தேவையோ அந்த ஆராய்ச்சியில்மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

இன்றையதேவைக்குரிய ஆராய்ச்சியே, நாளையதேவையின் படிக்கட்டு. அதன் அடிப்படையில், பார்வையற்றமாணவர்கள், சமச்சீர் கல்வியை சிரமமின்றி படிக்க, ஆடியோ சி.டி.யைஎங்கள் மாணவிகள் தயார் செய்துள்ளனர்.முதல்பருவம் மட்டுமே நிறைவேறியுள்ளது.அடுத்தஇரண்டு பருவங்களும் விரைவில்,சி.டி.யாகமாணவர்களுக்கு வழங்க உள்ளோம். அடுத்தபருவ சி.டி.,க்களை, ரெக்கார்டிங் சென்டரில் வைத்து தயாரிக்க முயற்சிசெய்து வருகிறோம், என்றார். சமச்சீர் சி.டி., வேண்டுவோரும், தன்னம்பிக்யை பாராட்டுவோரும், 94889 49279 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

0 comments:

Post a Comment