இன்று பள்ளி கல்வித்துறை முதன்மைசெயலாளர் சபிதா அவர்களை சந்தித்துமனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர். அனுமதி வாங்கிய பின்புதான் திருமதிசபிதா அவர்களை சந்திக்க முடியும்என்று காவல்துறை
விளக்கமளித்தது.ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறைசட்டத்தைக்காக்கும் பொருட்டு போராட்டக்கார்ர்கள்மீது தடியடி நடத்தினர். இதில்ஒரு பெண் உட்பட பலர்காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர்செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும்காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர்மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர்.
இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம்எங்கள் மீது காவல்துறையினர் தடியடிநடத்தினர் இதில் ஒரு பெண்னுக்குபலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர்சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில்அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தைதிசை திருப்பிய சிலர் மீதும் எங்கள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர்மீதும் இன்று மாலை மாநகரகாவல் துறை ஆனையாளரிடம் புகார்மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.






0 comments:
Post a Comment