Friday, 5 September 2014

சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து
ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்க முயன்றனர்.மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்களை கலைக்க முயன்ற காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

0 comments:

Post a Comment