Friday, 5 September 2014

தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சேத்துப் பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொடக்கக்கல்வித் துறையில்
201 பேர், பள்ளிக் கல்வித் துறையில் 134 பேர், மெட்ரிகுலேஷன் பிரிவில் 30 பேர், ஆங்கிலோ-இந்தியன் பிரிவில் 2 பேர், கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பிரிவில் 10 பேர் என மொத்தம் 377 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர். நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உட்பட கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர்.

0 comments:

Post a Comment