Thursday, 4 September 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்


புதுடெல்லி, செப்.5-மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது.7 சதவீத அகவிலைப்படி உயர்வுமத்திய
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்கனவே 100 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், 6-வது சம்பள கமிஷன் சிபாரிசின்படி, அவர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.ஜூலை 1-ந் தேதி முதல்...இந்த 7 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற் கான முடிவு எடுக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,691 கோடி கூடுதலாக செலவு ஆகும். 2014-2015-ம் நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கு ரூ.5,127 கோடி கூடுதல் செலவு ஏற்படும்

0 comments:

Post a Comment