Monday, 8 September 2014

மருத்துவ படிப்புக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


சென்னை, செப்.9-மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கலந்தாய்வுதமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி. எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்கள் உள்பட மொத்தம் 64 இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலை அரங்கில் நடைபெற்றது.காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த இறுதிக்கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விருப்ப கல்லூரிகளுக்கு இட மாறுதல் செய்யும் நோக்கில் பங்கேற்றனர்.சென்னை கல்லூரிகளில் சேர ஆர்வம்பெரும்பாலான மாணவ- மாணவிகள் சென்னை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக ஆர்வம் செலுத்தினர். ஆனால் சென்னையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் தலா ஒரு இடம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 2 இடம் என 4 இடம் காலியாக இருந்தது.இந்த 4 இடங்களும் விரைவாக நிரப்பப்பட்டுவிட்டது. விருப்பத்திற்கு ஏற்ப பிற அரசு கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகள் இடங்களை மாற்றிக்கொண்டனர். இதே போன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 12 பி.டி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) காலியாக உள்ள இடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

0 comments:

Post a Comment