சென்னை, செப்.18-தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வக்கீல் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-2 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பித்தும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் மெட்ரிகுலேசன் இயக்குனரகம் காலம் தாழ்த்துகிறது. அதுபோல கட்டிட சான்று கேட்டும் பிரச்சினை செய்கிறார்கள். கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களை சரியாக சேர்க்கவில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை அரசு தரவில்லை. இந்த பணம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இந்த பணத்தை உடனே தரவேண்டும். அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க மெட்ரிகுலேசன் இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment