Tuesday, 9 September 2014

12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்

அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணிநியமன ஆணை தயார் நிலையில்உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் எனமொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம்
தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர்தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும்பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர்பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில்வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம்ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணைவழங்கப்பட்டது.
பணிநியமனஉத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ்மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணைவழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பானவழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்பணி நியமன உத்தரவை எதிர்பார்த்துஇருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவுகிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவைஅவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம்வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள்நடந்து வருவதாக துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயேதயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்குமாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாகஉத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்றுஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment