அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. கணிதம், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு,
புள்ளியியல், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய 5 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த 5 பாடப் பிரிவுகளில் நேர்முகத் தேர்வுக்கு சென்றுவந்த அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியலை (உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல்) ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை இரவு தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் தெரிவு பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment