சென்னை, செப்.2-தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது. ‘ராக்கிங்’கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி எச்சரித்தார். மருத்துவ படிப்புதமிழ்நாட்டில் 19
அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்து கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அறிவுரை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மருத்துவ படிப்பிற்காக தேர்வான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பூங்கொத்து கொடுத்து வரவேற்புசென்னை அரசு மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான அறிவுரை முகாமில், தேர்வான 250 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். புதிதாக வந்திருந்த மாணவ-மாணவிகளை, ‘சீனியர்’ மருத்துவ கல்லூரி மாணவிகள் பூங்கொடுத்து கொடுத்தும், இனிப்புகளை ஊட்டிவிட்டும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த வகுப்பை மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி மேற்பார்வையிட்டார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளிடம் பேசியதாவது:-‘சீனியர்’களை மதியுங்கள்மருத்துவ பணி ஒரு புனிதமான பணியாகும். இந்த பணியில் எல்லாரும் வந்துவிட முடியாது. சென்னை அரசு மருத்துவ கல்லூரி தமிழ்நாட்டிலேயே முன்னோடி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. எனவே புதிதாக சேர வந்திருக்கும் மாணவிகள் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படியுங்கள். விடாமுயற்சியுடன் படியுங்கள். மேலும், கல்லூரியில் ‘ராக்கிங்’ பற்றி கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம். ‘ராக்கிங்’ நமது மருத்துவ கல்லூரியில் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் ‘ராக்கிங்’ செயலில் ஈடுபடும் மாணவ- மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் ‘சீனியர்’களும் உங்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வார்கள். அதே சமயம் உங்களது ‘சீனியர்’களை மதியுங்கள். அவர்களிடம் தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார். உடை கட்டுப்பாடுமேலும், உடை விஷயத்தில் மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரியின் விதிகளின் படி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற உடைகள் அணியக்கூடாது என்றும் மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று நடந்த முகாமில், மாணவ-மாணவிகளோடு அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தனர்.
0 comments:
Post a Comment