5 ஆண்டுகளாகவழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்குபுறம்பாக 2006ம் ஆண்டு முதல்வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரேதவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில்சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர்ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்ரூ.500 மற்றும் ரூ.600 தனிஊதியம் பெற்று வந்தனர். இவர்களில்1.1.2006க்கு முன் தலைமை ஆசிரியர்பதவி உயர்வு பெற்றால் அடிப்படைஊதியத்துடன் இந்த தனி ஊதியமும்சேர்க்கப்பட்டு, உரிய தர ஊதியமும்அனுமதிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்யஅரசு உத்தரவிட்டிருந்தது. திருத்திய ஊதிய குழுவின்கீழ் ஊதியம்கணக்கிடப்பட்ட தேதி அல்லது 1.6.2009 தேதிக்குபிறகு தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு பெற்ற எவருக்கும் ரூ.500 அல்லது ரூ.600 தனி ஊதியம்வழங்கப்படக்கூடாது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில்முதன்மை கல்வி அலுவலர், மாவட்டகல்வி அலுவலர் அரசாணைகளை தவறாகபுரிந்துகொண்டு 1.6.2009க்கு பிறகு அல்லதுதிருத்திய ஊதிய குழுவின் கீழ்ஊதிய நிர்ணயம் செய்த பிறகு தலைமைஆசிரியர் பதவி உயர்வு பெற்றால்அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் அனுமதித்துஆணையிடுகின்றனர். அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்தவிபரங்கள் தெரியவந்துள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் இருந்துஅவ்வாறு வழங்கப்பட்ட தனி ஊதியத்தை பிடித்தம்செய்ய பள்ளி கல்வி இயக்குநர்ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பானஉத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனிஊதியம் அனுமதிக்கப்படுவது மாநில கணக்காயரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருத்திய ஊதிய குழுவின்படி அரசுஉயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்தனி ஊதியம் பெற அனுமதிஇல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக1.1.2006க்கு பின்னர் பதவி உயர்வுபெற்று திருத்திய ஊதியக்குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம்செய்யப்பட்ட பின்னர் தனி ஊதியம்அனுமதிக்க கூடாது.
எனவே அனைத்து முதன்மைகல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும்தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து தலைமைஆசிரியர்களின் பணி பதிவேட்டை சரிபார்க்கவேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வின்போது தனி ஊதியம் 1.1.2006க்குபிறகு அல்லது திருத்திய ஊதியக்குழுவிற்குவர விருப்பம் அளித்த தேதிக்கு பின்னர்சேர்க்கப்பட்டிருந்தால், ஊதிய மறுநிர்ணயம் செய்யவேண்டும். கூடுதலாக பெற்ற தொகையை ஒரேதவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில்சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment