Saturday, 6 September 2014

அமைச்சர் பதவியிலிருந்து மாதவரம் வி.மூர்த்தி அதிரடி நீக்கம்!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாதவரம் வி.மூர்த்தி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்து வந்த பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தியிடம் இருந்து நேற்று அந்த பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் பதவியும் மாதவரம் வி.மூர்த்தியிடம் இருந்து இன்று பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக ரமணா பதவியேற்க உள்ளார்.
ஆவின் துறையில் பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மூர்த்தியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment