Thursday, 11 September 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சிறப்புக் பி.எட். , எம்.எட். கல்வி சேர்க்கை

 தமிழ்நாடுதிறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக் கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்வியாழக்கிழமை (செப்.11) முதல் விநியோகிக்கப்படும் என்று
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: மாற்றுத்திறன்
குழந்தைகளுடன்பணிபுரியக் கூடிய பயிற்சி பெற்றவல்லுநர்களின் தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு சிறப்புக் கல்வியில்முதுநிலைத் தொழிற் பட்டயம், முதுநிலைதொழில் சான்றிதழ் படிப்புகளை 2015-ஆம் ஆண்டு முதல்பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. ஏற்கெனவே, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்பி.எட். சிறப்புக் கல்வியைபல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இப்போதுமாநிலத்திலேயே முதன் முறையாக எம்.எட். சிறப்புக் கல்வியும்பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர் சேர்க்கைக்கானநுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம்தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த எம்.எட். படிப்புக்கானவிண்ணப்பம், புதிதாக அறிமுகம் செய்யப்படஉள்ள சிறப்பு கல்வி படிப்புகளில்சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக தலைமை அலுவலகத்திலும், சிறப்புக்கல்வி கற்றல் மையங்களிலும் வியாழக்கிழமைமுதல் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment