Friday, 19 September 2014

ஐந்து பாடங்களுக்கான உதவி பேராசிரியர் பணி இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

  ஐந்து பாடங்களில், உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள, 1,096 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தியது. 
           பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இயற்பியல் உட்பட, ஐந்து பாடங்களின் இறுதி மதிப்பெண் பட்டியல் நேற்று இரவு, ஆசிரியர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment