Monday, 1 September 2014

6-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்தில் தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை பேரணாம்பட்டு,

செப்.2-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் 6-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புத்தக
பையில்மண்எண்ணெய்வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாகர்உசேன் வீதியை சேர்ந்தவர் கண்ணபிரான். அவரது மகள் ஹரினி (வயது 12), அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலையில் வழக்கம்போல ஹரினி பள்ளிக்கூடத்திற்கு வந்தாள். அப்போது புத்தகப்பையிலேயே, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு வந்ததாக தெரிகிறது. தீக்குளிப்புபின்னர் பள்ளிக்கூட கழிவறைக்கு சென்ற மாணவி ஹரினி மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.காலை 9 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு வந்த சக மாணவிகள் அந்த கழிப்பிடத்திற்கு சென்றபோது அங்கிருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் புகையும் வந்துள்ளது. உடனே கழிவறையின் மேல் பகுதி வழியாக மாணவிகள் எட்டிப்பார்த்தபோது, மாணவி ஹரினி உடல் எரிந்த நிலையில் கிடந்ததைக்கண்டு, அலறியடித்து கூச்சல் போட்டனர். கருகி சாவுஉடனடியாக அங்கு சென்று பார்த்த ஆசிரியர்கள், கழிவறையின் கதவை உடைத்து உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்த ஹரினியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ஹரினி வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால், வேலூர் செல்லும் வழியிலேயே மாணவி ஹரினி பரிதாபமாக செத்தாள்.பள்ளிக்கூட வளாகத்தில் மாணவி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், குடியாத்தம் துணை சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.மாணவி இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளிக்கூடத்திற்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.காரணம் என்ன?தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி ஹரினியின் தாய் மஞ்சுளா ஏற்கனவே இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து ஹரினியின் தந்தை கண்ணபிரான் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.மேலும், ஹரினியின் உறவுக்கார பெண் கோலார் தங்க வயலில் கல்லூரியில் படித்து வந்ததாகவும், சமீபத்தில் பேரணாம்பட்டுக்கு வந்த அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. அந்த பெண்ணுடன் மிகுந்த பாசமாக பழகி வந்த ஹரினி, அந்த சம்பவத்திற்கு பின் மனம் உடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.எனினும், பள்ளிக்கூட கழிவறையில் மாணவி ஹரினி எதற்காக தீவைத்து தற்கொலை செய்து கொண்டாள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment