Wednesday, 10 September 2014

அரசு ஒதுக்கீட்டில் சுயநிதி பல் மருத்துவ படிப்பில் சேர இறுதிக் கட்ட கலந்தாய்வு 201 இடங்களுக்கு 2ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


சென்னை,செப்.11-சுயநிதி பல்மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 201 இடங்களுக்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.கலந்தாய்வுதமிழ்நாட்டில் உள்ள அரசு
மருத்துவக்கல்லூரிகள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள்ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்., அரசு பல்மருத்துவக்கல்லூரி, சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில் சேர்வதற் கான கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.கலந்தாய்வு முடிந்து கல்லூரிகளும் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் கல்லூரிகளில் சேராமல் 64 எம்.பி.பி.எஸ்.இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருந்தன. அந்த இடங்களுக்கு கடந்த 8-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலைஅரங்கில் கலந்தாய்வு நடைபெற்றது. ஏற்கனவே சுயநிதி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள், அரசு பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 64 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.சேர்ந்தனர்.பல்மருத்துவ படிப்பில் சேர்ந்தனர் மேலும் அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 29 பி.டி.எஸ்.இடங்கள் இருந்தன. அந்த இடங்களுக்கு 9-ந்தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 201 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாகக்கிடந்தன. அந்த இடங் களுக்கு நேற்று கலந்தாய்வு நடந்தது. இந்த இடங்களுக்கு 1906 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தகுதியானவர்கள் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் இடங்களை தேர்ந்து எடுத்தனர்.கலந்தாய்வை மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் செய்திருந்தார்.

0 comments:

Post a Comment