Wednesday, 10 September 2014

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர கலந்தாய்வு 15-ந் தேதி தொடங்குகிறது


சென்னை, செப்.11-தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் டிப்ளமோ நர்சிங் படிக்க 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ்-2 முடித்த மாணவிகள் விண்ணப்பித்தனர்.
2 ஆயிரம் இடங்களுக்கு 8 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில் நர்சிங் உள்ளிட்ட தொழில்கல்வி படித்த மாணவிகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. பிளஸ்-2 படிப்பில் உயிரியல் படித்தவர்களுக்கு 65 சதவீதம் வழங்கப்படுகிறது. 10 சதவீதம் இதர குரூப் எடுத்து படித்த மாணவிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவிகளுக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. கலந்தாய்வு 15-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழில்கல்வி படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. 16-ந் தேதி முதல் பொது கலந்தாய்வு நடக்கிறது. 18-ந் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.

0 comments:

Post a Comment