Tuesday, 12 August 2014

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் வசூலிக்கவேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டி ஏன் அமைக்கவில்லை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


சென்னை, ஆக.13-தமிழகத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு கல்விக் கட்டண கமிட்டியை தமிழக அரசு ஏன் அமைக்கவில்லை? என்று ஐகோர்ட்டு கேள்வி
எழுப்பியுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாகிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கல்வி கட்டணம்பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த கல்வி உதவித்தொகை, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ரூ.6,500 என்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.21,700 என்றும் நிர்ணயம் செய்து, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.டி.எம்.ஏ.பாய் பவுண்டேஷன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், பாலிடெக்னிக் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரம் குறைத்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு 2003-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.பாக்கித் தொகைஇந்த அரசாணையின்படி மாணவர்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கட்டணமாக வசூலித்து வருகிறோம். ஆனால், கல்வி உதவித் தொகை பெறும் இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகை, அதைவிட குறைவாக அரசு நிர்ணயம் செய்துள்ளது. எனவே, ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து, பாக்கித் தொகையை உடனடியாக தனியார் பாலிடெனிக் நிர்வாகங்களுக்கு வழங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி கேள்விஅப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தியிடம், ‘என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கும்போது, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டியை தமிழக அரசு இதுவரை ஏன் நியமிக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக, கூடுதல் அரசு பிளீடர் கூறியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment