சென்னை, ஆக.13-தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் மண்டல வாரியாக 10 நாட்கள் நடைபெற உள்ளது.தேர்ச்சி சதவீதம்பள்ளி கல்வித்துறையின் செயலாளர் த.சபீதா மற்றும் பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகள் ஆகியோர் எடுத்த கடும் முயற்சி காரணமாக 2013-ம்
ஆண்டை விட 2014-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த வருடமும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து அவற்றில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.விலையில்லா பொருட்கள் அதாவது மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகம், சைக்கிள், புத்தகப்பை, காலணி, கலர்பென்சில், அட்லஸ், நோட்டு புத்தகம், சீருடை, ஜியாமெண்டரி பாக்ஸ், பஸ்பாஸ் ஆகியவை இலவசமாக சரியான முறையில் வினியோகிக்கப்பட்டுள்ளனவா என்று அறியவும் ஏதாவது விடுபட்டு போயிருந்தால் உடனடியாக வழங்கவும் இந்த கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலை பள்ளிகள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களை அழைத்து இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிகளை தயார்படுத்துதல்கூட்டத்தில், பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ-மாணவிகளை நன்றாக தயார்படுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி, உஷா, ராஜேந்திரன், லதா, செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வர்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். 10 நாட்கள்இந்த கூட்டம் இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தில் நடக்க உள்ளது. மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.






0 comments:
Post a Comment