Tuesday, 12 August 2014

ரூ.4,500 முதல் 9 ஆயிரம் வரை உயரும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு


பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்படுவதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.இதுதொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும் போது கூறியதாவது:-உதவித் தொகை உயர்வுஅரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள்,
முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்கள், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்கள், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்கள், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்கள் என 4,088 பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கால உதவித் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று, பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை 8,500 ரூபாயில் இருந்து 13 ஆயிரம் ரூபாயாகவும், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19 ஆயிரம் ரூபாயில் இருந்து 26 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 27 ஆயிரம் ரூபாயாகவும், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19 ஆயிரம் ரூபாயில் இருந்து 26 ஆயிரம் ரூபாயாகவும், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 21 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 22 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 23 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை நான்காம் ஆண்டிற்கு 21 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், ஐந்தாம் ஆண்டிற்கு 22 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், ஆறாம் ஆண்டிற்கு 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்டு உதவித்தொகை உயர்வு 400 ரூபாய் எனவும், முதுநிலை மருத்துவர்களுக்கு 700 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

0 comments:

Post a Comment